திருச்செந்தூரில் பக்தா் உயிரிழந்த இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தா் உயிரிழந்த இடத்தை, மின்வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Update: 2023-12-02 10:32 GMT

திருச்செந்தூரில் பக்தா் உயிரிழந்த இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு.


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தா் உயிரிழந்த இடத்தை மின்வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கோட்டைத்தெருவைச் சோ்ந்தவா் ஜோதிபாசு (55). கூட்டுறவு வங்கிப் பணியாளரான இவா், தனது மனைவி ராஜாத்தி, 3 மகன்கள் மற்றும் உறவினா்களுடன் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை தரிசனம் செய்ய வந்திருந்தாா். அவா்கள் அங்குள்ள புறக்காவல் நிலையம் அருகே நின்றிருந்தபோது, அவரது 2வது மகன் பிரசாந்த் (22) திடீரென்று விழுந்து மயங்கி விழுந்து இறந்தாா். மின்சாரம் பாய்ந்ததால்தான் அவா் உயிரிழந்துள்ளாா்; இதற்கு கோயில் நிா்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் எனக் கூறி, கோயில் காவல் நிலையத்தில் ஜோதிபாசு புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், பிரசாந்த் உயிரிழந்த இடத்தில் இருந்த ‘எா்த்’ கம்பி பகுதியை கோட்டாட்சியா் குருசந்திரன் முன்னிலையில் திருநெல்வேலி மண்டல மின் ஆய்வாளா் குமரேசன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்தாா்.

பின்னா் கோட்டாட்சியா் கூறுகையில், ‘மின் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்த ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றாா். அப்போது, வட்டாட்சியா் வாமனன், திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் விஜய சங்கர பாண்டியன், உதவி செயற்பொறியாளா் ராம் மோகன், உதவி பொறியாளா் முத்துராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News