சிவகாசி அருகே தெருவின் நடுவே இருக்கும் மின் கம்பங்களால் அவதி

சிவகாசி அருகே தெருவின் நடுவே இருக்கும் மின் கம்பங்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளகினர்.

Update: 2024-05-20 11:58 GMT
தெருவின் நடுவே உள்ள மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட சாலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் ஏராளமான தெருக்களில் மின் கம்பங்கள் ஏனாதானோ என்று அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக திருத்தங்கல் மண்டலத்தில் 18வது வார்டு காந்திஜிநகரில் உள்ள தெருக்களில் 3 மின்கம்பங்கள் சாலை நடுவே உள்ளன.மின் கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்காமல்,ஏற்கெனவே இருந்த இடத்திலேயே மின்கம்பங்களை சுற்றி மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துவிட்டனர்.

இதனால் மின் கம்பங்கள் தற்போது சாலையின் நடுவிலுள்ளன. சாலைகளின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்,குடிநீர், குப்பை வாகனங்கள் தெருவிற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களை வெகு தூரத்தில் நிறுத்திவிட்டு தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகியுள்ளனர்.எனவே,இந்த சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையோரங்களில் வைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றன.

Tags:    

Similar News