குமரியில் குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம்

Update: 2023-10-31 09:05 GMT

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல்லும் சாலையில்  நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் சாலையை மறித்தவாறு நடுவே நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானை கூட்டத்தை கண்டு பீதியடைந்தனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை கூட்டம் சாலையை விட்டு  நகரத் தொடங்கின. இதையடுத்து சாலை யோரமாக வாகனங்களில் காத்திருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர். இதுபோல் யானை கூட்டம் அடிக்கடி பேச்சிப்பாறை சாலையில் உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க  பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா கூறியதாவது:-  பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை யானைகள் நடமாடி வருவ தாக கூறப்படும் பகுதி யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்துகொண்டு இருக்கின்றன. தற்போது அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட் டுள்ளது. மற்றபடி யானை கள் அவற்றின் வழித்தடங் களில் மட்டுமே நடமாடி வருகிறது. குறிப்பிட்ட சீசன் முடிவடைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News