மலைச்சரிவுகளில் பாறைகளை உடைத்து கட்டப்படும் கட்டிடத்தை தடுக்க வலியுறுத்தல் !
திண்டுக்கல் சிறுமலை மலைச்சரிவுகளில் பாறைகளை உடைத்து கட்டடம் கட்டுவதற்கு கிராம நிர்வாக அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 10:09 GMT
கட்டிடம்
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பகுதிகளில் தனியார் தோட்டங்களில் சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து உயர்ந்த கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மலைச்சரிவுகளில் பாறைகளை உடைத்து கட்டடம் கட்டுவதற்கு கிராம நிர்வாக அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினர் மலைசரிவுகளில் கட்டிடம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.