வீணாகும் குடிநீர் தொட்டிகள் சீரமைக்க வலியுறுத்தல்

விஷார் புதிய காலனியில், பயன்பாடின்றி கிடக்கும் இரு குடிநீர் தொட்டிகளையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-06-21 13:19 GMT

விஷார் புதிய காலனியில், பயன்பாடின்றி கிடக்கும் இரு குடிநீர் தொட்டிகளையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் ஒன்றியம், விஷார் ஊராட்சி, புது காலனியில் 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு கூடுதல் குடிநீர் ஆதாரமாக பெருமாள் கோவில் தெருவிலும், கொண்டகட்டியம்மன் கோவில் அருகிலும் ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு குடிநீர் தொட்டி நீரை அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்தது.

தொடர்ந்து, ஒரு சில மாதங்களில் கொண்டகட்டியம்மன் கோவில் அருகில் உள்ள குடிநீர் தொட்டியின் மரக்கிளை ஒடிந்து விழுந்ததில், குடிநீர் தொட்டி சேதமானது. இதனால், வீட்டு குழாயில் தண்ணீர் வராத நாட்களிலும், கூடுதல் தண்ணீர் தேவைக்கும் இப்பகுதியினர் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே, விஷார் புதிய காலனியில், பயன்பாடின்றி கிடக்கும் இரு குடிநீர் தொட்டிகளையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஷார் புதுகாலனியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News