100 சதவீதம் வாக்காளிப்பை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் !
கன்னியாகுமரியில் 100 சதவீதம் வாக்காளிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-03-22 10:30 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வலியுறுத்தி ”100 சதவீதம் வாக்களிப்போம், என் ஓட்டு என் உரிமை” என்ற தலைப்பில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்பி பாயிண்டின் பின்புறம் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த செல்பி பாயிண்டில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அஜிதா, ஒன்றிய பொறியாளர் ரெஜின், துணை வட்டார வளர்ச்சி அலவலர்கள் ஆனந்த் விஜயன், முத்துராஜ், சந்திரன், ஊராட்சி செயலர் காளிப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.