இலுப்பூர் அருகே பைக் விபத்தில் ஊழியர் பலி
இலுப்பூர் அருகே பைக் விபத்தில் ஊழியர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 09:50 GMT
அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நெறிஞ்சிப் பட்டியை சேர்ந்தவர் மதியழகன்(40). திருமயம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் வட்ட துணை அளவையராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியழகன் பைக் கில் புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அன்னவாசல் அருகே சென்றபோது, எதிரே இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவ ரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியி லேயே மதியழகன் உயிரிழந்தார். முருகேசன் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகிறார் விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.