அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செட்டிச்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:20 GMT
அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சேலம் அருகே செட்டிச்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்து படித்தால் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றி விளக்கி பேசினார். மேலும் போட்டி தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கக்கூடிய பயிற்சி விவரங்களை சரண்கிருஷ்ணன் என்பவர் மாணவர்களிடையே பேசினார். தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து சேலம் அரசு தொழிற்பயிற்சி நிறுவன அதிகாரி சண்முகம் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் செய்திருந்தார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அகமது உசேன் நன்றி கூறினார்.