கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு - அரசுக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை
சந்தை புதுப்பாளையம் புதூர் மாரியம்மன் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் அருகே புதூர் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் .இந்தக் கோவிலில் மொட்டை அடித்து ,காது குத்து விழா மற்றும் திருமண விழாக்கள் போன்றவை நடைபெற்று வருகிறது .பக்தர்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் ,இரவில் கோவில் தங்குவது, வழிபடுவது மற்றும் ஆடு கோழி போன்றவை நேர்த்திக் கடன் செலுத்துவது என பக்தர்கள் செய்து வருகிறார்கள் இந்த கோவில் இரவு பகல் பாராமல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் உள்ளது. கோயிலுக்கு முன்பு ஒரு அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது .கருவறைக்கு செல்ல முடியாதவர்கள் சாலையிலே நின்று வணங்கி சென்றும் வாகனங்களுக்கு பூஜை செய்வதும் போன்றவை வழக்கமாக செய்து வருகிறார்கள்.
இப்பொழுது அந்த அம்மன் சிலையை மறைத்து கடையை ஆக்கிரமித்து செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது .அப்படியே சென்றால் கடைக்கு முன்பு நிற்காதீர்கள் ,வாகனம் நிறுத்தாதீர்கள் என்று பக்தர்களை தகாத வார்த்தையில் திட்டுவதால் பக்தர்களுக்கும் ஆக்கிரமிப்புகாரர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடப்பதால் நிம்மதியை தேடி கோயிலுக்கு வந்தால் கூட நிம்மதி இல்லை என்று புலம்பி செல்லும் பக்தர்கள். இந்த நிலை தொடர்ந்தால் சில நாட்களில் அம்மன் சிலையே காணாமல் போய் விடும். ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யும்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பக்தர்கள் அனைவரும் அலுவலகத்தை முற்றுகை விடுவோம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.