அமலாக்க துறை அதிகாரி ஜாமின் மனு தள்ளுபடி

Update: 2023-12-07 01:32 GMT

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டத்தில் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிச., 1ல் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, டிச., 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டவர், பின் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். .இவ்வழக்கில் ஜாமின் கோரி, அங்கித் திவாரி தரப்பில், மதுரை வழக்கறிஞர்கள் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.நேற்று மனு விசாரணையின் போது, ஜாமின் வழங்க லஞ்ச ஒழிப்பு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை நீதித்துறை நடுவர் மோகனா தள்ளுபடி செய்தார்.
Tags:    

Similar News