நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி இன்ஜினியர் உயிரிழப்பு

நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி இன்ஜினியர் உயிரிழந்தார்.;

Update: 2024-04-30 12:23 GMT
விபத்தில் உயிரிழந்த கோல்டன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் கோல்டன் (25). இன்ஜினியரிங் பட்டதாரி. இவரது நண்பர் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த சஜின் (25) நெருங்கிய நண்பர்களான இரண்டு பேரும் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து வந்தனர்.      

இந்த நிலையில் இரண்டு பேரும் நேற்று முளகுமூடு பகுதியில் உள்ள ஸ்டுடியோவிற்கு சென்றனர். பின்னர் இரவு சஜினை தனது பைக்கில் அழைத்து வந்த கோல்டன் திங்கள் நகர்  பஸ் ஸ்டாண்ட் அருகே இறக்கிவிட்டு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.        பைக் இரணியல் தாண்டி கண்டன்விளை பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக கோல்டன் சென்ற பைக் மீது மோதியது.

Advertisement

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோல்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.       இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் அரசு பேருந்து டிரைவர் கல்லுக்கூட்டத்தைச் சேர்ந்த ஜெரால்டு சலீம் (43)என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News