கடைக்குள் புகுந்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை
தென்காசி பலசரக்கு கடையில் ரூ. 3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
Update: 2024-02-05 04:51 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி ஒப்பனை விநாயகர் கோவில் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் கடையை திறந்து கடைக்கு உள்ளே சென்ற போது பொருள்கள் சிதறி கிடந்ததை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முகமூடிக் கொள்ளையனை தேடி வருகின்றனர். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.