திருவாரூரில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
Update: 2024-06-21 05:31 GMT
வரவேற்பளித்த அதிமுகவினர்
தஞ்சை மற்றும் நாகையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். நாகையில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருவாரூர் மாவட்டம் வருகை தந்த பொதுச்செயலாளருக்கு திருவாரூர் அருகே வாளவாய்கால் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் ஓ எஸ் மணியன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.