பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஹரியானாவில் நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சின்னாளபட்டி வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2024-01-10 11:01 GMT

வரவேற்பு 

சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ரோல் பால் வீரர் வீராங்கனைகள் ஹரியானாவில் நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் வீரர், வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ரோல்பால் சங்க செயலாளருமான மாஸ்டர் பிரேம்நாத் அவர்கள் இன்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News