நெல்லை வந்த தலைவருக்கு உற்சாக வரவேற்பு
சமத்துவ மக்கள் கழக மாநில தலைவரும் முன்னாள் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணனுக்கு உற்சாக வரவேற்பு.;
Update: 2024-03-29 05:28 GMT
இந்தியா கூட்டணி வேட்பாளர்
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்ற சமத்துவ மக்கள் கழக மாநில தலைவரும் முன்னாள் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணன் நேற்று (மார்ச் 28) நெல்லை வந்தார். அவரை நெல்லை மாட்ட திமுக கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன் ஆகியோர் வரவேற்றனர்.