அரியலூர் அருகே சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் அருகே சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நீரின்றி அமையுமா மரநின்றி வாழும் உயிரினம் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Update: 2024-06-06 16:27 GMT

மரக்கன்று வழங்கல்

 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், மரக்கன்றுகளை நட்டு இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய இடம் என்றால் அது பள்ளிகள். இந்த பூமியை காப்பது அனைத்து தரப்பு மக்களின் தலையாயக் கடமையாகும்.

 சுற்றுச்சூழல் பாதிப்படைவதால் இந்த ஆண்டு கடும் வெப்ப அலை தாக்குதலுக்கு நாம் ஆளாகி கொண்டிருக்கிறோம். நமது தேசம் அடுத்த ஆண்டும் இத்தகைய பாதிப்பை எதிர்நோக்க கூடாது எனில் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து தங்களால் இயன்றவரை பொது இடங்களிலும் தனியார் இடங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும்.

மனிதர்கள் இல்லாவிட்டாலும் மரங்கள் உயிர் வாழும். ஆனால் மரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினங்களும் உயிர் வாழ முடியாது என்றார். பின்னர் அவர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாணவ,மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில் ராஜ், ஆசிரியை செந்தமிழ் செல்வி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News