அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக சுற்றுச்சூழல் தினம் !

சுற்றுச்சூழல் மன்றம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக சுற்றுச்சூழல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-20 06:22 GMT

 சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் மன்றம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக சுற்றுச்சூழல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பசுமைச் சாம்பியன் அசோக் குமார் அவர்கள் ஆக்சிஜன் முக்கியத்துவம், மரங்கள் நடுதல், மழை நீர் சேகரிப்பு, நெகிழிப்பை ஒழிப்பு மீண்டும் மஞ்சப்பை ஆகியன குறித்து ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரி ஒன்றை மாட்டி அதன் மூலம் செயல்முறை விளக்கம் கொடுத்தார்.

நெகிழியை பயன்படுத்த மாட்டோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர் . சுற்றுச்சூழல் குறித்து நடைபெற்ற வினாடி விழாவில் வெற்றி பெற்ற செபாஸ்டியன், பாண்டி லெட்சுமி, ஆஜிதா, உதய சந்திரிகா, பைரோஸ் பானு, சகாபுதீன் ஆகிய மாணவ மாணவிகளுக்கு விதை உண்டியல் மற்றும் மஞ்சப்பை பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியைகள் அனுசியா, மனோன்மணி, ராணி மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுகுமாறன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News