குழித்துறை மறை மாவட்ட ஆயர் திருநிலை படுத்தும் விழா
கன்னியாகுமரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறை மாவட்ட இரண்டாவது புதிய ஆயரை திருநிலைப்படுத்தும் விழா நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறை மாவட்ட இரண்டாவது புதிய ஆயராக ஆல்பர்ட் அனஸ்தாஸ் என்பவர் போப் ஆண்டவரால் நியமனம் செய்யப்பட்டார். இந்த புதிய ஆயர் திரு நிலை படுத்தும் விழா இன்று கருங்கல் அருகே நட்டாலும் புனித தேவசகாயம் திருத்தலத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு மதுரை பேராயரும், குழித்துறை மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அந்தோணி பப்புசாமி தலைமை தாங்கி திருநிலை படுத்துகிறார். போப் ஆண்டவர் பிரான்சிசின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரல்லி முன்னிலை வகிக்கிறார். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த கோட்டார் மதுரை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயர்கள் ஏராளம் பேர் பங்கேற்க உள்ளனர்.
விழாவை ஒட்டி மிகப் பிரமாண்டமான திருப்பலி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் அருட் பணியாளர்கள் திருப்பலியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.