போகுமிடம் தெரியாமல் பஸ்ஸை ஓட்டுபவர் ஈபிஎஸ் - திண்டுக்கல் லியோனி

எடப்பாடி பழனிச்சாமி ஊர் பெயர் பலகையே இல்லாத பஸ்ஸை ஓட்டுகிறார். எங்கு போகிறோம் என்று தெரியாமல் பஸ்சை ஓட்டி செல்கிறார் என கன்னியாகுமரியில் நடந்த பிரசாரத்தின் போது திண்டுக்கல் லியோனி பேசினார்.;

Update: 2024-04-10 04:20 GMT

லியோனி பிரசாரம் 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம் பி-யை  ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளரும்,  பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல்ல லியோனி நேற்று அஞ்சுகிராமம் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-        கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பதவியேற்க கூடிய விஜய் வசந்த் போட்டியிடுகிறார். 3 ஆண்டுகள் அருமையான சாதனைகளை அவர் படைத்துள்ளார். தமிழக முதலமைச்சரே அவரை பாராட்டி உள்ளார். எனவே அவருக்கு  கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.    

Advertisement

 தமிழகம் வந்த மோடி, மேடையில் வைத்து ஒரு கும்பிடு போட்டார். அப்படி ஒரு கும்பிடு யாரும் போட்டு இருக்க மாட்டார்கள். யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் இந்த கூலகும்பிடு போடும் இவர்களை நம்ப முடியாது.    எடப்பாடி பழனிச்சாமி ஊர் பெயர் பலகையே இல்லாத பஸ்ஸை ஓட்டுகிறார். எங்கு போகிறோம் என்று தெரியாமல் பஸ்சை ஓட்டி செல்கிறார். இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது மு க ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பிரச்சாரத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News