ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.;
Update: 2024-01-14 05:17 GMT
சமத்துவ பொங்கல்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடந்தது.இதையொட்டி செங்கரும்பு கட்டிய தோரணம் அமைக்கப்பட்டு வண்ணக்கோலமிட்டு பொங்கலோ பொங்கல் எனக் கூறி சக்கரைப் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் ஒன்றிய ஆணையாளர் விஜயசந்திரிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுமதி, நிர்வாக மேலாளர் நம்பி தேவி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமார், ராஜா, காசாளர் தமிழிசை ராஜன் உள்ளிட்ட ஒன்றிய அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினைச் சேர்ந்த மகளிர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.