குதிரையேற்ற போட்டி: செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவன் சாதனை

குதிரையேற்ற போட்டியில் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவன் 6 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-01-13 13:40 GMT

சாதனை படைத்த மாணவன்

சேலம் செயின்ட் ஜான்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் வ.ரா.ஹயக்ரீவா பிள்ளை. இவர், குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்கள், பரிசுகள் பெற்று சாதனை படைத்து வருகிறார்.

இதற்கிடையே சேலம் மான்சரோவர் பள்ளியில் நடந்த மாநில அளவிலான குதிரையேற்ற போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டார். முடிவில் மாணவன் வ.ரா.ஹயக்ரீவா பிள்ளை 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவனுக்கு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் சாதனை மாணவன் வ.ரா.ஹயக்ரீவா பிள்ளையை பள்ளி முதல்வர் ஸ்டான்லி சேவியர், பயிற்சியாளர் சந்துரு, மாணவனின் தாயார் வக்கீல் ராஜராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News