பெரியமாரியம்மன் கோவில் வகையார் கம்பம் பிடுங்கும் விழா

கம்பம் பிடுங்கும் திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள்

Update: 2024-04-07 08:23 GMT

மாரியம்மன் கோயில் திருவிழா

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இதை சார்ந்த வகையார் கோவிலாக உள்ள காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் பண்டிகையானது ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்தாண்டுக்கான கோவில் திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கம்பம் ஊர்வலத்தின் போது ஒருவருக்கு ஒருவர் மஞ்சளை முகத்தில் பூசியும், வீதிகள் தோறும் உள்ள சாலைகளில் மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும், தொழில் சிறக்க குடும்பத்தில் அமைதி நிலவும் கம்பத்தின் மீது உப்புகள் தூவியும், சில்லறை காசு, எலுமிச்சை பழத்தை தூக்கி வீசி வழிபாடு செய்தனர்.

இந்த கம்பம் ஊர்வலமானது பெரிய மாரியம்மன் கோவில் தொடங்கி முக்கிய வழியாக சென்று கரை வாய்க்காலில் நிறைவு பெற்றது. பின்னர் கம்பத்திற்கு பூஜை செய்து காளிங்கராயன் வாய்க்காலில் விடப்பட்டது.

Tags:    

Similar News