ஓசூர் அருகே எருது விடும் விழா

ஒசூர் அடுத்த ஆருப்பள்ளியில் நடந்த எருதுவிடும் விழாவில் 200க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2024-01-18 04:36 GMT

மாட்டு பொங்கலன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தையம் போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபலமானது "எருதுவிடும் விழா".. எருதுவிடும் விழாவில் வேகமாக ஓடக்கூடிய காளைகள்,மாடுகள் மட்டுமே பங்கேற்கும் மாடுகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட வண்ண தடுக்கைகள் கட்டப்பட்டு, இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்படும் இருபுறங்களில் மரங்களால் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு தோரணம் கட்டும் பகுதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தான் இளைஞர்கள், மாட்டினை அடக்க வேண்டும்.

ஜனவரி மாதம் தொடங்கி - ஏப்ரல் மாதம் வரை வெவ்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் எருதுவிடும் விழா, கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல் எருதுவிடும் விழாவாக ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்றது.. சூளகிரி,பேரிகை,பாகலூர்,உத்தனப்பள்ளி,மேலுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் அதிகமான காளை, மாடுகள் அழைத்துவரப்பட்டு பங்கேற்றிருந்தன.. காளைகளை அடக்க இளைஞர் கூட்டத்திற்கு இடையே கடும் போட்டியும், சவாலாகவும் இருந்து மல்லுக்கட்டினர்..பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர்..

Tags:    

Similar News