ரோட்டை எளிதில் கடக்க எஸ்கலேட்டர்
ரோட்டை எளிதில் கடக்க எஸ்கலேட்டர்;
By : King 24x7 Website
Update: 2023-12-28 10:33 GMT
ரோட்டை எளிதில் கடக்க எஸ்கலேட்டர்
ஒட்டன்சத்திரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாமை பார்வையிட்டு அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது; ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் திண்டுக்கல்-பழநி ரோட்டை எளிதில் கடந்து செல்வதற்கு வசதியாக மூன்று இடங்களில் எஸ்கலேட்டர் , லிப்ட் வசதி அமைக்கப்பட உள்ளது.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். எம்.பி., வேலுச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்டி.ஓ., சரவணன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதின், நகராட்சித் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொது குழு உறுப்பினர் பாலு, வர்த்தக பிரிவு தலைவர் ஆறுமுகம், கலந்து கொண்டனர்.