வண்டலூர் பூங்காவில் தப்பிய குரங்கு பிடிபட்டது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தப்பிய குரங்கு பிடிபட்டது

Update: 2024-02-19 11:02 GMT


வண்டலூர் உயிரியல் பூங்காவில் தப்பிய குரங்கு பிடிபட்டது


வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் கான்பூரில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை ஊழியர்கள் தனியாக கூண்டில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் திடீரென பூங்காவில் இருந்து தப்பி சென்றுவிட்டது. அவை ஊரப்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அனுமன் குரங்குகளை கூண்டில் உணவு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

நேற்று முன்தினம் மண்ணிவாக்கம் பகுதியில் கூண்டில் உள்ள உணவை சாப்பிட வந்த ஒரு அனுமன் குரங்கை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதனை தொடர்ந்து தேடி வந்தனர்.இதற்கிடையே இன்று காலை அய்யஞ்சேரி பகுதியில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவதற்காக தப்பி சென்ற மற்றொரு அனுமன் குரங்கு வந்தது. கூண்டுக்குள் நுழைந்ததும் அதன் கதவுகள் மூடியதால் அந்த குரங்கும் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட அனுமன் குரங்கை வனத்துறையினர் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். வெளியில் தப்பி மீண்டும் பிடிபட்ட 2 அனுமன் குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News