மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தன.

Update: 2024-01-11 07:30 GMT

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தலைமையில்ஜனவரி நடைபெற்றது, 

அரசு மற்றும் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் ஆர்வமுடன் போட்களில் கலந்து கொண்டனர். இதில் கொடுக்கப்பட்ட தகைசால் தமிழர், ஆட்சித் தமிழ், காஞ்சித்தலைவன், சமூக நீதி காவலர், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், வாய்மையே வெல்லும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, எழுதுகோல், முத்தமிழ் காவலர், ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகள் போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை முனைவர் செந்தில்குமார்பேராசிரியர்கள் ,முனைவர் செந்தமிழ் செல்வி முனைவர் ஹேமா மாலினி, தமிழ் துறை உதவி பேராசிரியர்கள் அன்பழகன் முத்துராஜா ஆனந்தி மற்றும் முனைவர்கள் சுபாஷினி, சேதுராமன், சுரேஷ்குமார், ஸ்ரீதர், ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்,

இதில் பேச்சு போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியை சேர்ந்த மாணவி காருண்யா முதல் பரிசும், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி சேர்ந்த மாணவி கலையரசி இரண்டாம் பரிசும், சாராத கல்லூரி மாணவர் சுரேந்திரன் மூன்றாம் பரிசும் பெற்றனர், மேலும் இதே போன்று கவிதை போட்டியில் சீனிவாசன் கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த்,முதல் பரிசும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கௌசல்யா இரண்டாம் பரிசும், சாரதா மகளிர் கல்லூரி சேர்ந்த மாணவி வர்த்தினி மூன்றாம் பரிசு பெற்றனர். மேலும் இதே போன்று கட்டுரை போட்டியில் சீனிவாசன் கல்லூரி சேர்ந்த மாணவி பொன் ஹரிணி முதல் பரிசும், பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி சேர்ந்த கிருத்திகா இரண்டாம் பரிசும், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்த மாணவி சின்னப்பொண்ணு மூன்றாம் பரிசு பெற்றனர். போட்டிகளில் தேர்வு செய்து வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News