திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரச்சாரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Update: 2024-04-06 13:16 GMT
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தருமபுரி கிழக்கு ஒன்றியத்தில்.ராமதாஸ் தண்டா, கருங்கல்லூர், இந்திரா நகர் காலணி,ஆலமரத்துக் கொட்டாய், வேப்பமரத்தூர் காலனி,வேப்பமரத்தூர் ஆகிய கிராமங்களில் நாடாளுமன்றத்தில் சமூகநீதியின் குரல் ஒலிக்கவும் திமுக அரசின் சாதனைகளையும் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணிக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரித்தார். நிகழ்வில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.