முன்னாள் முதல்வருக்கு முன்னாள் அமைச்சர்கள் வரவேற்பு
கோவை செல்ல குமாரபாளையம் வழியாக வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.;
Update: 2023-10-22 05:26 GMT
எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வில் பங்கேற்க குமாரபாளையம் புறவழிச்சாலை வழியாக வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் முதல்வருக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் சால்வை வழங்கினர். கட்சி நிர்வாகிகள் பலரிடம் சால்வை பெற்றுக்கொண்டு, அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.