கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்

முன்னாள் ராணுவ வீரர்கள் 3500 பேர் பயன்பெற்று வரும் என்.சி.சி கேண்டீனை மூடும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கருப்பு பட்டை அணிந்தும் தேசிய கொடியை சட்டங்களில் குத்திக்கொண்டும் ஆர்ப்பாட்டம்.

Update: 2023-11-05 10:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகரில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை என்.சி.சி கேண்டீனை மூடும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் விருதுநகர் என்.சி.சி கேண்டீன் வாயிலில் தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கருப்பு பட்டை அணிந்து கொண்டும் தேசிய கொடியை குத்திக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தப்பட்டனர் விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 3500 பேர் மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் 700 வீரர்களின் குடும்பத்தினர்கள் பயன்படுத்தி வரும் இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்.சி.சி கேண்டீன் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள்,இந்நாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல்,மதுரை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் இந்த கேண்டீனை மூடினால் வயதான காலத்தில் தங்களுக்கு வீண் அலைச்சல்,மன உளைச்சல் உண்டாகும் என்றும் இதனால் பொருட்கள் வாங்குவது தவிர்க்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே என்.சி.சி கேண்டீன் மூடினாலும் மாற்று ஏற்பாடாக ஈ.எஸ்.எம் -சி.எஸ். டி எக்ஸ்டன்சன் கவுன்டர் திறந்து மீண்டும் தாங்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்து ராணுவ அமைச்சகத்திற்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். சுகுமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News