தஞ்சாவூரில் தேர்தல் செலவின கணக்குகள் ஆய்வு 

தஞ்சாவூரில் தேர்தல் செலவின கணக்குகள் குறித்து வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலக்த்தில் ஆய்வுக்காக தாக்கல் செய்தனர்.

Update: 2024-04-12 15:00 GMT

தஞ்சாவூரில் தேர்தல் செலவின கணக்குகள் குறித்து வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலக்த்தில் ஆய்வுக்காக தாக்கல் செய்தனர்.   

பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது 07.04.2024 வரையிலான தேர்தல் செலவின கணக்கு விபரங்களை 10.04.2024 அன்று தேர்தல் செலவின மேற்பார்வையாளர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது ஒத்திசைவு கூட்டத்தின் போது தாக்கல் செய்துள்ளனர்.  

   வேட்பாளர்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்ட செலவின கணக்கு விபரங்களை தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் /மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  மேலும், பாராளுமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட ஒத்திசைவு கூட்டம் 17.04.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News