எக்ஸெல் கல்வி நிறுவனர் நாள் - மாணவிகளுக்கு ரூ.7.2 கோடி கல்வி உதவி தொகை
எக்ஸெல் கல்வி நிறுவனர் நாளை முன்னிட்டு எக்ஸெல் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் செயல்பட்டு வரும் எக்செல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வானது கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஏகே நடேசன் , தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் நாளை முன்னிட்டு கல்லூரி கல்வி நிறுவனங்களின் சார்ந்த நிர்வாகிகள் அனைவரின் சார்பில் மலர் கிரீடம் மலர் மாலை அணிவித்து செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சிறப்பு விருந்தினராக விருட்சா நிறுவனத்தின் மனித வள மூத்த இயக்குனர் ஸ்ரீ சளபதி மேகா வெங்கடா அவர்கள் பங்கு கொண்டு வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பு மற்றும் கணிப்பொறியின் தேவைகள் மற்றும் அவசியம் பற்றி எடுத்துரைத்து பேசினார் . பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் .எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் சார்பில் பெற்றோரை இழந்த வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பாடப்பிரிவில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவி நளினாவிற்க்கு காப்பீட்டு தொகையாக 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரியில் பயிலும் மருத்துவத்துறை மற்றும் பொறியியல் துறை மாணவ மாணவிகள் 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலானவர்களுக்கு சுமார் 7.2 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி கட்டண சலுகைக்கான சான்றிதழ்கள் வழங்கபட்டது நிகழ்வில் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்