மேல்மா சிப்காட் விரிவாக்கம் - பொங்கல் வைத்து எதிர்ப்பு

செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கெங்கையம்மன் கோவிலில் நூதன முறையில் போராட்டப் பொங்கல் வைத்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-30 04:18 GMT

பொங்கல் வைத்து போராட்டம் 

 செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு மேல்மா, மணிப்புரம், தேத்துறை, குரும்பூர், நர்மபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம், காட்டுகுடிசை ஆகிய 11 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3174 ஏக்கர் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 126 நாட்களாக காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை கைது செய்து 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில் தொடர் அழுத்தம் காரணமாக 7 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 211 வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு அரசு தொடர்ந்து கைகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித்து 11 கிராம பொதுமக்கள் கங்கை அம்மன் கோவிலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூதன முறையில் போராட்ட பொங்கல் வைத்து பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News