கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களை நிறுத்தணும்!
கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர பேரூராட்சி கூட்டம் தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத் தலைவர் எஸ். சந்திரசேகரன், செயல் அலுவலர் கு.குகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் குடிநீர் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்தும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த மழைநீர் வடிகால் மூடிகளை உடனடியாக புதுப்பித்தல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
மேலும் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கும், முன்பதிவு சேவை ஏற்படுத்துவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.