காஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயண அட்டை சலுகை நீட்டிப்பு

காஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயண அட்டை சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2024-03-28 12:42 GMT

மாவட்ட ஆட்சியர் 

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால், இலவச பயணத்துக்கான பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் சலுகை அட்டை பயன்படுத்தி, இந்த பயண சலுகை பெற்று வருகின்றனர்.

கடந்தாண்டுக்கான பயண அட்டை சலுகை மார்ச் 31ம் தேதியுடன்முடிவடைகிறது. ஆனால், ஜூன் 30ம் தேதி வரை, மூன்று மாத அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு, கலெக்டர் அலுவலகத்தில்உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அல்லது 044 -- -29998040 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்."

Tags:    

Similar News