கண் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கீழ்வேளூரில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலகில் 80 மில்லியன் மக்கள், இந்தியாவில் ஒன்றரை கோடி மக்கள் கண்ணழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டு புள்ளி ஆறு சதவீதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பல்வேறு வகைகள்: முதல் நிலை கண்டழுத்த நோய். இதனால் 0. 5% முதல் 1. 7% பேர் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். இரண்டாம் நிலை கண்ணழுத்த நோய்க்கு 0. 3% பேர். நோயின் அறிகுறிகள்: கண்ணில் நீர் வடிதல், கண்ணில் வலி ஏற்படுதல், கண் சிவத்தல், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் பசியின்மை. நோய் கட்டுப்பாட்டு முறைகள் என்பது சரியான காலங்களில் மருத்துவ பரிசோதனை செய்தல், குடும்ப உறுப்பினர்களையும் மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுதல். விதிமுறைகள்: கண்ணில் சொட்டு மருந்து விடுதல், கண் அறுவை சிகிச்சை செய்தல், லேசர் அறுவை சிகிச்சை செய்தால், வாய் வழியாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து கார்பானிக் அண் ஹைட் ரைஸ் பீட்டா தடுப்பான்கள்.
உலக குளுக்கோமா வாரம் மார்ச் 10 முதல் மார்ச் 16 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கீழ்வேளூர் மற்றும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய கண் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி வேளாண்மை கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது முனைவர் டி ஆர் கமல் குமரன், இணை பேராசிரியர், தோட்டக்கலைத்துறை அவர்கள் வரவேற்புரை அளித்தார். மருத்துவர் பி விஜயகுமார், மருத்துவர் சிவகுமார் மற்றும் மருத்துவர் ஐயப்பன் சுகாதாரத்துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசளித்தனர். தொழில்நுட்ப உரை மருத்துவர் ஆர் சத்யநாராயணன், மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாளர் அரசு மருத்து கல்லூரி நாகப்பட்டினம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை முனைவர் காயத்ரி மற்றும் முனைவர் குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.