இலவச கண் சிகிச்சை மற்றும் இரத்ததானம் முகாம்
நெய்வேலியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.;
Update: 2024-06-10 16:31 GMT
ரத்ததான முகாம்
நெய்வேலி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நெய்வேலி தொ. மு. ச. வளாகம் அருகே மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் இரத்ததானம் முகாம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.