அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
Update: 2023-11-08 11:20 GMT
கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் காப்பர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கார் உடையாம்பாளையம் ஊராட்சி பகுதியில் க. பரமத்தி லயன் சங்கம் சார்பில், கண் பரிசோதனை செய்து கண்பார்வையற்றவர்களை கண்டறிந்து, கடந்த மாதம் 8-ம் தேதி மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் அறுவை சிகிச்சைக்காக 26 பேரை அழைத்துச் சென்றனர். அறுவை சிகிச்சை முடிந்து ஊர் திரும்பி அவர்களுக்கு, காருடையாம்பாளையம் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வன் கண் கண்ணாடிகளை வழங்கினார். மேலும், கண்களை பாதுகாப்பாக பராமரிக்கவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.