வாலிபரிடம் பணம் பறித்த போலி சிபிஐ அதிகாரி

காரம்பாக்கம் பகுதியில் சிபிஐ அதிகாரி என கூறி இளைஞரிடம் இருந்து பணம் பறித்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-02 09:52 GMT

வாலிபரிடம் பணம் பறித்த போலி சிபிஐ அதிகாரி

காரம்பாக்கம், தர்மராஜா நகர் விஸ்வநாதன் பிரதான தெருவைச் சேர்ந்தவர் பாரதி, 36. நேற்று முன்தினம் இவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி, 'நீங்கள் போதைப் பொருள் கடத்துவதாக புகார் வந்துள்ளது; உங்கள் வீட்டிற்கு போதைப் பொருள் 'பார்சல்' வந்துள்ளதற்கான ஆதாரம் உள்ளது எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் கைது செய்யப் போவதாக கூறியதால், பாரதி பயந்துள்ளார்.

மேலும் அந்த நபர், நடவடிக்கை எடுக்காமல் இருக்க 25,000 ரூபாய் கேட்டுள்ளார். மிரட்டலுக்கு பயந்த பாரதி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு, 21,400 ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பின், அந்த நபரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரித்த போது, சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து நேற்று, வளசரவாக்கம் போலீசில் பாரதி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News