உடுமலை அருகே போலி மருத்துவர் கைது.

உடுமலை அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-04 14:24 GMT

உடுமலை அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உடுமலை அருகே முறைகேடாக செயல்பட்ட வந்த சிகிச்சை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதுபோல் அதனை நடத்தி வந்த போலி மருத்துவரும் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை எரிசனாம்பட்டி சாலையில் உள்ள பாப்பனூத்து பிரிவு பகுதியில் போலி மருத்துவர் சிகிச்சை அளித்து வருவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிற்கு புகார் வந்தது.

அதன்பேரில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையில், தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருண் பாபு,  எரிசனாம்பட்டி  வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த் மற்றும் அலுவலககண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பாப்பனூத்து பிரிவில் தவமணி (40) என்பவர் நடத்தி வந்த  ஸ்ரீஹரி மருத்துவ சிகிச்சை மையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் முறையான கல்வித் தகுதி இல்லாமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ், மற்றும் தளி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முறைகேடாக செயல்பட்டு வந்த சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தபோது அவர் வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதும், குளுக்கோஸ் மருந்துகள் ஆகியவற்றை செலுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தவமணி கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News