போலி நன்கொடை ரசீது - செயல் அலுவலர் மீது வழக்குப்பதிவு

மதுரை அருள்மிகு வீரகாளி அம்மன் திருக்கோவிலில் போலி ரசீது வழங்கி நன்கொடை வசூலித்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-06-20 08:06 GMT

போலி ரசீது 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளி அம்மன் திருக்கோவிலில் 72 ஆம் ஆண்டு உற்சவ விழா ஐந்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயில், இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விழாவில் பொது மக்களிடம் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டது. இந்து அறநிலைய துறையால், நிர்ணயிக்கப்பட்ட தொகையான 300 ,600, 1200,இதற்கு கூடுதலாகவோ,அல்லது குறைவாகவோ செலுத்தும் பொதுமக்களுக்கு போலியான ரசீதுகள் வழங்கியும், அன்னதானத்திற்கு, வழங்கப்பட்ட பொருள்களுக்கும் போலியான ரசீதுகளை வழங்கியும், லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த இக்கோயிலின் நிர்வாக செயல் அலுவலர் சண்முகப்பிரியாவை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இந்து இயக்கங்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கோவில் நிர்வாக செயல் அலுவலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையாளர், உதவி ஆணையாளர் நேரிடையாக ஆய்வு செய்ய இப்பகுதி மக்களை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News