நண்பரின் பேரில் போலி முகநூல் கணக்கு - இன்ஜினியரிடம் ரூ. 2. 15 லட்சம் மோசடி

நண்பரின் பேரில் போலி முகநூல் கணக்கு துவங்கி இன்ஜினியரிடம் ரூ. 2. 15 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-22 04:28 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம், அருகே உள்ள ஜேம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சகாய லெனின் (40).  என்ஜினியரான  இவர் குமரி மாவட்ட  சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.      

அந்த மனுவில், - எனது முகநூல் பக்கத்தில் என் நண்பர் ஒருவரின் ஐடியை வைத்து மர்ம நபர் போலியாக ஐடி உருவாக்கியுள்ளார். பின்னர் அந்த ஐடி மூலம் என் நண்பர் கேட்பது போல ரூபாய் 2.15 லட்சம் கேட்டார். நானும் என் நண்பர் கேட்பதாக  நினைத்து பணத்தை அவர் அனுப்பி தந்த வங்கி கணக்குக்கு  அனுப்பினேன்.       அதன் பிறகு நண்பரிடம் கேட்டபோது நான் ஏமாற்றியது தெரிய வந்தது. எனவே என்னிடம் மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு, என் பணத்தையும் பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News