பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போலி நீதிபதி கைது

பழனி முருகன் கோவிலுக்கு மாவட்ட நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய வந்த தர்மபுரியை சேர்ந்த போலி நீதிபதியை அடிவாரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-04-29 01:25 GMT

ரமேஷ் பாபு

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு (57) என்பவர் நேற்று வருகை தந்தார். அப்போது அவர் தன்னை நீதிபதி என்று தெரிவித்து ரோப்காரில் முன்னதாக செல்ல அனுமதிக்குமாறு கேட்டு உள்ளார். உடனடியாக இதனையடுத்து அவரிடம் கோவில் ஊழியர்கள் அடையாள அட்டையை கேட்ட பொழுது அடையாள அட்டை காட்ட மறுத்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ரமேஷ்பாபுவிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறியதும், தான் தர்மபுரி மாவட்ட நீதிபதியாக பணி செய்வதாகவும், தற்போது தேர்தல் பணி காரணமாக சேலத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரமேஷ்பாபுவை கைது செய்த போலீசார் அடிவாரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News