பேனா திருடியதாக பொய் குற்றச்சாட்டு - மாணவி தற்கொலை முயற்சி
மயிலாடுதுறையில் 10 ரூபாய் பேனாவை திருடிவிட்டதாக சக மாணவிகள் புகார் - ஆசிரியரும் திட்டியதால் மனமுடைந்த மாணவி பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சி
மயிலாடுதுறை தருமபுரத்தில் அரசு உதவிபெறும் ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நலத்துக்குடியை மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி மதியம் அவர் வகுப்பறையில் இருந்து தேர்வு எழுதுவதற்காக சென்றுள்ளார். அப்போது மாணவி ஒருவரின் பேனாவை காணவில்லை என்றும் அவர் தான் கடைசியாக வகுப்பறையில் இருந்து வந்தார், பேனாவை திருடிவிட்டதாக சக மாணவிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.
தான் எடுக்கவில்லை என்று கூறியபோது மாணவிகள் திட்டிவிட்டு வகுப்பு ஆசிரியரான அகிலாண்டேஸ்வரியிடம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். வகுப்பு ஆசிரியரும் விசாரிக்காமல் அந்த மாணவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார். அதற்கு மாணவி நான் பேனாவை எடுக்கவில்லை என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு மன உளைச்சலுடன் தேர்வு எழுத சென்றுள்ளார்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது, சக மாணவிகள் சுற்றி வளைத்து, பேனா திருடி நீ தான், என்பதை ஒப்புக் கொள் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் பங்கில், 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு சென்றுள்ளார் . பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தவரை, பெற்றோர்கள் மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.