ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம்

Update: 2023-12-07 04:41 GMT

மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்பதில்லை. 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம். எனவே, அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும்; முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும். குறிப்பாக இரத்த சோகை, இதய நோய் மற்றும் பிற மருத்துவ காரணங்களினால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள் தாமாக முன் வந்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு தரும் பயனீட்டுத்தொகை ரூ.1100/- தொகையுடன், முகாமில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியிலிருந்து ரூ.3900/-மும் சேர்த்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.5000/- வழங்கப்படும். ஊக்குவிப்பாளருக்கு ரூ.200/- ம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News