கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா.,வின் நினைவு தினம்
கோவில்பட்டி மணிமண்டபத்தில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா.,வின் மூன்றாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 15:57 GMT
கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் கி. ராஜநாராயணனின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு கி. ரா வின் மணிமண்டபத்தில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் உதய சங்கரின் வழிகாட்டுதலின் பேரில் கோவில்பட்டி கிளையின் சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் செயலாளர் கி.பிரபு, தலைவர் பா.மணிமொழி நங்கை, பொருளாளர் கண்ணகி, செயற்குழு உறுப்பினர் தங்கத்துரையரசி மற்றும் உறுப்பினர்கள், மணிமண்டபக் காப்பாளர்கள் வன்னியராஜ், பொன் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.