தனியார் பேருந்தில் மட்டும் கட்டண உயர்வு
நத்தத்திலிருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்தில் மட்டும் கட்டணம் உயர்வால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 09:31 GMT
தனியார் பேருந்தில் மட்டும் கட்டண உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை வரை செல்லும் அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் டிக்கெட் விலை 25.ரூபாய் மட்டுமே. ஆனால் தனியார் பேருந்தில் கடந்த இரண்டு நாட்களாக பயணிகளிடம் டிக்கெட் விலை 27.ரூபாய் கட்டணம் பெறுகின்றனர். என்ன காரணம் என்று பயணிகள் நடத்துனரை கேட்டதற்கு டோல்கெட் திறந்ததை முன்னிட்டு 25 ரூபாய் பணத்திலிருந்து 2 ரூபாய் சேர்த்து 27 ரூபாயாக நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகின்றது.என கூறியிருக்கின்றனர். இதனால் பயணிகளும், சமூகஆர்வலர்களும் உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.