பண்ணைத் தகவல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம்

பேராவூரணி வட்டார பண்ணைத் தகவல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.

Update: 2024-01-24 11:29 GMT

 பேராவூரணி வட்டார பண்ணைத் தகவல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வட்டார பண்ணை தகவல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) எஸ்.ராணி தலைமை வகித்தார். அவர் வேளாண் திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். பேராவூரணி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளரும், அட்மா திட்ட தலைவருமான க.அன்பழகன் முன்னிலை வகித்துப் பேசினார்.  அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பொன்.செல்வி, தென்னை நாற்றங்கால் அமைத்தல், சிறுதானியங்கள் பயிரிடுதல், தொழில்நுட்பங்கள் பற்றியும், கண்டுணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுதல் குறித்தும், உள் மாவட்ட அளவிலான பயிற்சி பண்ணை பள்ளி நடத்துதல், செயல் விளக்கங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். 

உதவி தோட்டக்கலை அலுவலர் எஸ்.ராஜா தோட்டக்கலை திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் இத்திட்டங்கள் குறித்து அனைத்து ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் முன் விவாதிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள்  கு.நெடுஞ்செழியன், த.சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News