தீராத வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
கடலூர் மாவட்டம், தெற்கு வழுதலம்பட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-01-31 00:38 GMT
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வழுதலம்பட்டை சேர்ந்த விவசாயி செல்வநாயகம் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த அவர் முந்திரி பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.