விபத்தில் விவசாயி பலி - ரூ.17.13 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் விவசாயி பலியான வழக்கில் பால கட்டுமான பணியின் போது எச்சரிக்கை பலகை வைக்காத கட்டுமான ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரூ.17.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update: 2024-05-01 06:58 GMT
நீதிமன்றம் 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கட குளம் கிராமத்தை சேர்ந்தவர் போது ராஜா வயது 47 விவசாயி. புதுக்கோட்டை சந்தப்பேட்டையில் மீன் வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 26.6.2015 அன்று புதுக்கோட்டையில் இருந்து வேங்கட குளத்துக்கு பைக்கில் சென்ற போது அறந்தாங்கி சாலையில் தனியார் பள்ளி அருகே பாலம் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.

விபத்து குறித்து வல்லதராக்கோட்டை போலீசார் விபசாரணை மேற்கொண்டனர். பாலம் கட்டுமான பணி நடந்த இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்துக்கு காரணம் என்பதால் போது ராஜா இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன் பிரகாஷ், மகள் பிரதீபா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ண ஜெயராஜா ஆனந்த் விசாரித்து முறையான எச்சரிக்கை பலகை வைக்காத காரணத்துக்காக பாலம் கட்டுமான ஒப்பந்ததாரர் முருகேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரூபாய் 17 லட்சத்து 33 ஆயிரத்து 740 இழப்பிடத் தொகையாக இரண்டு மாதத்துக்குள் கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News