பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி நடராஜனை பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.;

உயிரிழந்த விவசாயி
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கிருஷ்ணராஜகுப்பம் ஊராட்சி கோரகோப்பம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (55). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இன்று அதிகாலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது, இவரை பாம்பு கடித்துள்ளது. அங்கு இருந்து விரைவாக வந்து வீட்டில் உள்ள இவரது மகன் பிரவீன் ராஜை அழைத்துக் கொண்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
.அங்கு மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு பாம்பு கடித்து வெகு நேரமாக ஆகிவிட்டதால் மேல் சிகிச்சைக்கு வேலூர் அருகில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் இருந்த நடராஜன் விவசாயி திடீரென்று மார்பு வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.